உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் டிக்கெட் முறைகேடு டிராவல்ஸ் ஊழியர் கைது 

ரயில் டிக்கெட் முறைகேடு டிராவல்ஸ் ஊழியர் கைது 

விழுப்புரம்:ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று, உளுந்துார்பேட்டை அமைச்சர் கோவில் தெருவில் உள்ள ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அந்த டிராவல்ஸ் நிறுவனம், ரயில்வே வழங்கிய உரிமத்தை தவறாக பயன்படுத்தி, இணையம் வழியாக ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.அதையொட்டி, அங்கிருந்த காலாவதியான 15 ரயில் பயண டிக்கெட் உட்பட 39,000 ரூபாய் மதிப்பிலான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், டிராவல்ஸ் நிறுவன ஊழியர் உளுந்துார்பேட்டை முருகவேல், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை