உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஜி.ஆர்.பி., தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் சுரேந்தர்,35; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மற்றும் , மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதே போல் விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் டி.எஸ்.ஆர்., நகரில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர்,31; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி