உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராமதாசுடன் இருந்து சாதிக்க முடியாததை தி.மு.க.,வில் இருந்து சாதித்துள்ளேன் விழுப்புரம் அருகே வேல்முருகன் பேச்சு

ராமதாசுடன் இருந்து சாதிக்க முடியாததை தி.மு.க.,வில் இருந்து சாதித்துள்ளேன் விழுப்புரம் அருகே வேல்முருகன் பேச்சு

விழுப்புரம், : 'ராமதாசுடன் 43 ஆண்டுகள் இருந்து சாதிக்க முடியாததை, 5 ஆண்டுகளில் தி.மு.க., கூட்டணியிலிருந்து சாதித்துள்ளேன்' என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அவர் பேசியதாவது:வட தமிழகத்தில் ஜாதிய சண்டை இல்லாமல், சமூக மாற்றம் ஏற்பட, ரவிக்குமார், திருமாவளவன் ஆகியோரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜாதி, சமூக, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தி, பா.ஜ., தேர்தல் களம் காண்கிறது.விழுப்புரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஜாதி மோதல் பிரச்னையில்லை. நான், திருமாவளவனோடு கைகோர்த்துள்ளதால், எங்கு பிரச்னை நடந்தாலும், உடனே பேசி, சரி செய்து, என் சமூக இளைஞர்கள் மீது எஸ்.சி., - எஸ்.டி., வழக்கில் இல்லாமலும், தலித் தரப்பினர் மீதும் வழக்கு வராமலும் பார்த்துக் கொள்கிறோம்.பா.ம.க., ராமதாசுடன் 43 ஆண்டுகள் இருந்து சாதிக்காததை, ஸ்டாலின், திருமாவளவனோடு கைகோர்த்து, தி.மு.க., கூட்டணியில் 5 ஆண்டில் சாதித்திருக்கிறேன்.இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளில் குடும்பத்திற்கு, தி.மு.க., அரசு தான் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியது. அவர்களுக்காக, நான் தான் கேள்வி எழுப்பினேன்.விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கவும், நான் சட்டசபையில் பேசினேன். 21 குடும்பத்தினரின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு நான் பாடுபட்டேன். டோல்கேட்டுகளை அகற்ற நான் போராடினேன். இன்று தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., அறிவிக்கவில்லை. அவர்களோடு கூட்டணி வைத்துள்ள ராமதாசின், சமூக நீதி இதுதான்.ஜீரோவுக்கு கீழ் மதிப்பெண் வழங்கிய பாஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளார். கடந்த தேர்தலில் ஒரு கூட்டணி, இந்த தேர்தலில் ஒரு கூட்டணி. வட தமிழகத்தில் தலித், வன்னிய சமூகத்தினர் ஓட்டின்றி யாரும் பதவிக்கு வர முடியாது. இவ்வாறு வேல்முருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை