உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆந்திரா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விழுப்புரம் போலீஸ்

ஆந்திரா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விழுப்புரம் போலீஸ்

விழுப்புரம்: ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிக்காக விழுப்புரம் சரகத்தில் இருந்து 280 போலீசார் புறப்பட்டனர்.ஆந்திரா மாநிலத்தில் வரும் 13ம் தேதி லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, அந்த மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.விழுப்புரம் சரகத்தில் இருந்து கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட போலீசார் 280 பேர் நேற்று வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதில், விழுப்புரம் மாவட்ட போலீசார், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் இருந்து வாகனங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி