விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்' என அமைச்சர் மகேஷ் பேசினார்.விக்கிரவாண்டி தொகுதி காணை தெற்கு ஒன்றியம் கூடலுார், கொண்டியாங்குப்பம், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு. ஒட்டன் காடுவெட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.அமைச்சர் மகேஷ் பேசுகையில், முதல்வரின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சிவா தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து அமைச்சர்களிடம் சென்று கேட்டு செய்து தருவார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்' என்றார்.அமைச்சர் முத்துசாமி, பாடநுால் கழக தலைவர் லியோனி, லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, தொண்டாமுத்துார் ரவி முருகேசன், ஈரோடு நல்லசிவம், சுப்ரமணி, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, செயலாளர் ராஜா, அரசு தலைமை கொறடா கோவி செழியன், திருவாரூர் மாவட்டம் கலைவாணன், கல்யாணசுந்தரம், தொழில்நுட்ப பிரிவு ராமலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, பழனி, சிவகுமார், கருணாகரன், செல்வம், செல்வராஜ், அய்யனார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.