உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளி கீழே விழுந்து காயம்: கட்டட மேஸ்திரி மீது வழக்கு

தொழிலாளி கீழே விழுந்து காயம்: கட்டட மேஸ்திரி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் உரிய பாதுகாப்பின்றி கட்டட வேலை மேற்கொண்டதாக மேஸ்திரி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, 50; கொத்தனார். இவரை, கடந்த ஏப்ரல் 13ம் தேதி, விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு, கட்டட வேலைக்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த மேஸ்திரி ராஜா, 50; அழைத்துச் சென்றார்.உயரமான கட்டிடத்தில் நின்று சின்னதுரை வேலை செய்துகொண்டிருந்த போது சாரம் சரிந்து கிழே விழுந்ததில், சின்னதுரைக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.உடன், முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப் பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில், உரிய பாதுகாப்பின்றி கட்டுமானப் பணியை மேற்கொண்டதாக ராஜா மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்