மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
7 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
7 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
7 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
7 hour(s) ago
விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், 276 ஓட்டுச்சாவடி மையங்களில், இன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. ஆண் வாக்காளர்கள் -1,16,962, பெண் வாக்காளர்கள்- 1,20,040, இதரர் 290 என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.இதற்காக 276 ஓட்டுச்சாவடி மையங்கள்,ஓட்டளிக்க தயார் நிலையில் உள்ளன. இங்கு , தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்றுவர சக்கர நாற்காலி வசதி, மூத்த குடிமக்களுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர்களுக்கு உதவி செய்யும் நிலை அலுவலர்கள் வாயிலாக, உதவி மையங்கள் செயல்பட உள்ளன.276 ஓட்டுச்சாவடி மையங்களில், 3 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாகவும், 41 மையங்கள் மிகவும் பதற்றமானவையாக உள்ளது. இந்த 44 வாக்குச்சாவடி மையங்களுக்கு 44 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 216 மத்திய ஆயுத போலீஸ் படையினர் மற்றும் 2,800 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தொகுதியில் 44 பதற்றமான ஓட்டுச்சாவடிகள்உட்பட மொத்தம் 276 ஓட்டுச்சாவடி மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முக்கிய ஓட்டுச் சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி வளாகங்களின் வெளிப்புறங்களில் 99 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் கண்காணிக்கப்படும்.இத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) 552ம், வாக்குப்பதிவுக் கருவிகள் (கன்ட்ரோல் யூனிட்) 276 மற்றும் 276 வாக்கினை சரி பார்க்கும் விவிபாட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தல் பணிபுரிய தலா ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி 4 அலுவலர்கள் -உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 1,355 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எனவே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறவும், அனைத்து வாக்காளர்களும்100 சதவீதம் ஓட்டளிக்குமாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago