உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் பள்ளியில் சிறுமி பலி தாளாளர் உட்பட 3 பேர் கைது

தனியார் பள்ளியில் சிறுமி பலி தாளாளர் உட்பட 3 பேர் கைது

விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழனிவேல் மகள் லியோலட்சுமி, 4; செயின் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்த சிறுமி பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்தனர். சிறுமி உடல் நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் ஏற்கனவே பதிவு செய்த சந்தேக மரணம் பிரிவை, கொலையாகாத மரணம் என்ற பிரிவில் மாற்றம் செய்து, பள்ளி தாளாளர் எமில்டா, 65, முதல்வர் டோமினிக் மேரி, 50, ஆசிரியர் ஏஞ்சல், 33, ஆகியோரை கைது செய்தனர். எமில்டா, டோமினிக் மேரி ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல் தகுதியோடு இருந்த ஏஞ்சலை, விக்கிரவாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சத்தியநாராயணன், மூவரையும் வரும், 10ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஏஞ்சல், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.லியோலட்சுமி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தி, சிறுமியின் தாய் சிவசங்கரியிடம் முதல்வர் நிவாரண நிதி 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதற்கிடையே, சிறுமி இறந்த பள்ளியை, குழந்தைகள் நல அமைப்பு வாரிய ஒருங்கிணைப்பாளர்கள் தேவேந்திரன், ஸ்டெல்லா, சமூக ஆர்வலர் வாசுகி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை