உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உரிமமின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை

உரிமமின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம்: அரகண்டநல்லுார் அருகே உரிமமின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் போலீசார், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நாயனுார் ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்டாச்சிபுரம் அருகே வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், 42; மன்னன், 40; திருக்கோவிலுார் சந்தைபேட்டையை சேர்ந்த சையது, 50; ஆகியோர் நாட்டு துப்பாக்கியோடு அந்த பகுதியில் சென்றனர். மூவரையும் மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முயல் வேட்டைக்கு சென்றதும், உரிமம் பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகம் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்த சமயத்தில் சையது இறந்தார். இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாற்றப்பட்ட ஆறுமுகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், மன்னனை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !