உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வேலைவாய்ப்பு முகாமில் 34 பேர் தேர்வு

 வேலைவாய்ப்பு முகாமில் 34 பேர் தேர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில், இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை, வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குநர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். முகாமில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த 21 தனியார் நிறுவன பிரதிநிதிகள் நேர்காணல் நடத்தினர். 143 இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர். அவர்களில், மாற்றுத்திறனாளிகள் உட்பட 34 பேர் வேலைக்கு தேர்வு செய்து, பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், 14 பேர், இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத் துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்