உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்

அரசு கல்லுாரியில் 4ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி துவங்குகிறது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு: இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையின் 4ம் கட்ட கலந்தாய்வு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பி.எஸ்சி., - பி.சி.ஏ., (கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல்), அறிவியல் பாடப்பிரிவிற்கு நிரப்பப்படாத காலி இடங்களுக்கு கட் ஆப் 170 மதிப்பெண்களுக்கு மேல் நடக்கிறது. மறுநாள் 25ம் தேதி காலை 9:30 மணிக்கு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்பட மாட்டாது. மேலும் விபரங்களை கல்லுாரியின் இணையத ள முகவரியில் http://www. aagacvpm.edu.in/, அறிவிப்பு பலகையில் காணலாம். கலந்தாய்வு நாட்களில் மாணவர்கள் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை