| ADDED : ஜன 24, 2024 04:23 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் 61 கோடியே 52 லட்சம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆயிரத்து 909 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு பெற தவறியதால், 3 கோடியே 29 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 15 ஆயிரத்து 264 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,254 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 355 பேருக்கு 61 கோடியே 52 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் பொங்கல் பரிசு பொருட்களைப் பெற்றுள்ளனர். இப்பணிகள், கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.மேலும், மாவட்டத்தில் 32 ஆயிரத்து 909 ரேஷன் கார்டுதாரர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவில் பொங்கல் பரிசு பெற தவறினர்.இதனால், பொங்கல் பரிசான 3 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.இந்த தொகையை வழங்கிட கால நீடிப்பு செய்யுமாறு, பரிசுத் தொகை பெறத் தவறிய ரேஷன் கார்டுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.