மல்யுத்த போட்டியில் சாதனை: கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
வானுார்: மல்யுத்த போட்டியில் சாதித்த மாணவரை வானுார் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பாராட்டினார். கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், பல்வேறு பிரிவுகளில் ஏராளமான கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வானுார் அரசு கலை ம ற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறை பயிலும் மாணவர் பெரியசாமி, மல்யுத்த 55 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடம் பிடித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றார். அவரை கல்லுாரி முதல்வர் வில்லியம், உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில்நாதன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.