உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை தேவை

 சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாடுகள் சாலையை ஆக்கிரமித்து வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகளில் மாடுகள் வலம் வருவது தொடர் கதையாகி வருகிறது. நகரில் உள்ள 42 வார்டு பகுதிகளிலுமே மாடுகள் காலை முதல் இரவு வரை திரிவது வழக்கமாக உள்ளது. நேருஜி சாலை, திருச்சி சாலை, கிழக்கு பாண்டி ரோடு, சென்னை சாலை என நகரின் முக்கிய நெடுஞ்சாலை பகுதியிலும் அதிகாலை முதல் இரவு வரை பல இடங்களில் மாடுகள் ஹாயாக படுத்து ஆக்கிரமித்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள் நடமாட்டம் தொடங்கும் காலை 10:00 மணிக்கு மேல் படுத்து கிடக்கும் மாடுகள் சாலையில் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஹாரன் சத்தம் கேட்டு மாடுகள் மிரண்டு ஓடுவதால் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். கடந்தாண்டு, இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டபோது, நகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து, தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் நகராட்சி நிர்வாகம் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாயாக அபராத தொகையாக உயர்த்துவதுடன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை