| ADDED : டிச 01, 2025 05:39 AM
மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை நாகந்துார் சாலையில் பாலத்தில் விவசாய கழிவுகள் அப்புறப்படுத்தாமல் விட்டு செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலம் அடுத்த நாகந்துார் கிராமத்தில் உள்ள பாலத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் உளுந்து, எள், காராமணி உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்து, உலர்களம் இல்லாததால், பாலத்தில் காய வைத்து தானியங்களை பிரித்து எடுக்கின்றனர். அதன் பிறகு கழிவு பொருட்களை அங்கேயே பாலத்தின் ஓரம் விட்டுச் செல்கின்றனர். மழை பெய்யும் போது சாலையில் நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் பாலம் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. மேலும், பைக்கில் செல்பவர்கள் விவசாய கழிவில் சிக்கி கீழே விழந்து காயமடைகின்றனர். எனவே, விவசாய கழிவு பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.