உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மானிய உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்: வேளாண்துறை எச்சரிக்கை

 மானிய உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்: வேளாண்துறை எச்சரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மானிய உரங்களை விற்பனை செய்வோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண்துறை எச்சரித்துள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி மற்றும் உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதர பயிர்களுக்கும் தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ், சூப்பர் 1826 ஆகியவை கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்களை கொள்முதல் செய்யக் கூடாது. மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்வது தவறு. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக் கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது. மாவட்டத்தில் தனியார் உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உர மூட்டைகளை பதுக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி