| ADDED : டிச 03, 2025 06:21 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக முதல் தளத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், வரும் 8ம் தேதி, காலை 9:30 மணி முதல் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், விழுப் புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன தொழிற்சாலை மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவன பிரதிநிதிகள், ஒரே இடத்தில் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். இதன் மூலம் என்.சி. வி.டி. மற்றும் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஷ்ர் அப்ரண்டிஸ்ஸாக (தொழிற் பழகுநர்) சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை 9,600 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை அந்தந்த நிறுவனத்தால் வழங்கப்படும். எனவே, மாவட்ட இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.