உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., மாணவரணி வளவனுாரில் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., மாணவரணி வளவனுாரில் பொதுக்கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.வளவனுார் கடைவீதியில், நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். வளவனுார் நகர செயலாளர் முருகவேல் வரவேற்றார். நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, பன்னீர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., சிறப்புரை ஆற்றினர். பேச்சாளர்கள் ஆளூர் அப்துல் ஜலீல், காவேரி, எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர்கள் அற்புதவேல், ஏழுமலை, மாநில ஜெ., பேரவை இணை செயலா ளர் பாலசுந்தரம், ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முத்தையன், தகவல் தொழில்நுட்ப அணி ஜெகதீஸ்வரி, விழுப்புரம் தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் ராதிகா, முன்னாள் துணை சேர்மன் சரவணன், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் நாராயணன், முன்னாள் நகர செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி