உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது

செஞ்சி: கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த சோ.குப்பம் நந்தன் கால்வாய் அருகே உள்ள ஆண்டி குன்றில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராகி வருவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் ஆண்டி குன்றுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கே, சோ.குப்பம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம், 54; அர்சுனன், 68; புதுப்பாளையத்தை சேர்ந்த பச்சமுத்து, 70; ஐங்குனம் கிராமத்தை சேர்ந்த குமார், 54; ஆகியோர் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக இருந்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 லிட்டர் கள்ள சாராயம், சாராய ஊரல், அலுமினிய பாத்திரம், வெல்லம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி