உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

கண்டாச்சிபுரம்: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற ஆயந்துார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவன் ஓம் பிரகதீஸ்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் பங்கேற்றுத் திரும்பினார்.அவருக்கு நேற்று காலை பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் லதா தலைமைதாங்கினார். ஆசிரியர்கள் ஸ்டெல்லா, நீதிநாதன்,சீனிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் ஓம்பிரகதீசுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.உடற்கல்வி ஆசிரியர் ஜான்ஜெயசீலன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை