உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது

மூதாட்டி மீது தாக்குதல்; இரண்டு பேர் கைது

மயிலம் : மயிலம் அருகே கடன் தகராறில் மூதாட்டியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ் மனைவி மல்லிகா, 57; இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் பிரகாஷிடம் கடன் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் மல்லிகாவின் வீட்டிற்கு வந்து பிரகாஷ் கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதில் பிரகாஷ், 40; இவருடைய மனைவி ரேவதி, 38; மகன் ஜெகதீஷ், 16; ஆகியோர் மல்லிகாவை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மல்லிகா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து மயிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி