உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : இருவர் காயம்

மயிலம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி புவனேஸ்வரி 47; மீன் வியாபாரி. விழுப்புரம் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டார்.ஆட்டோவை விழுப்புரம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் டிரைவர் தணிகாசலம் ஒட்டி சென்றார். நேற்று காலை 4:00 மணிக்கு, ஆட்டோ சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்றபோது, அடையாளம் வாகனம் ஆட்டோ பின்புறம் மோதியது.இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. விபத்தில் மீன் வியாபாரி புவனேஸ்வரி, ஆட்டோ டிரைவர் தணிகாசலம் காயம் அடைந்தனர்.இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை