உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் தனியங்கி இயந்திரம்

அரசு பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் தனியங்கி இயந்திரம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மரகதபுரம், அத்தியூர் திருவாதி, தளவானுார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மரகதபுரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா, அத்தியூர் திருவாதி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, தளவானுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.அரசு மருத்துவர்கள் பொது சுகாதார நிபுணர் நிஷாந்த், அவினாஷ், சாருமதி ஆகியோர் சுகாதார விழிப்புணர்வு குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவிகளுக்கு, சுகாதார மேம்பாட்டிற்காக, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 3 நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் வழங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ