| ADDED : பிப் 01, 2024 05:21 AM
வானூர்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை, பள்ளி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கொடிசையத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள், பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை தடுப்பது குறித்தும் பதாகைகள ஏந்தி சென்றனர்.பேரணி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மெயின் ரோடு, இரும்பை ரோடு சந்திப்பு வரை சென்று மீண்டும் மயிலம் ரோட்டிற்கு வந்தடைந்தது. இந்த பேரணியில், குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தனியார் திருமண நிலையத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை திருமணம், போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, சுதா, அறிவழகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.