உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி பைக்கில் சென்றவர் பலி 

கார் மோதி பைக்கில் சென்றவர் பலி 

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில் கார் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜேஷ், 39; இவர், விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அதே ஓட்டலில், சப்ளையராக பணிபுரியும் விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையத்தைச் சேர்ந்த ரத்தினவேலு மகன் அபிசக்கரவர்த்தி, 20; என்பவருடன், நேற்று அதிகாலை வேலை முடிந்து, விழுப்புரத்தில் இருந்து ஜானகிபுரம் வழியாக, ஸ்பிளண்டர் பைக்கில் புதுச்சேரி நோக்கி புதிய பைபாஸ் சாலையில் சென்றனர். பைக்கை அபிசக்கரவர்த்தி ஓட்டினார்.ஜானகிபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த மாருதி சுவிப்ட் கார், பைக் மீது மோதியது. இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அபிசக்கரவர்த்தி முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை