உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: கோவையில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட பாஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிரணி தலைவி யமுனாராணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நதியா கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் கலிவரதன், தியாகராஜன், சுகுமார், பொதுச் செயலாளர்கள் முருகன், முரளி, துணை தலைவர்கள் குபேரன், தங்கம், ராஜலட்சுமி, மண்டல தலைவர்கள் விஜயன், அய்யனார், கோவிந்தன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை