| ADDED : ஜன 09, 2024 10:42 PM
விக்கிரவாண்டி, - விக்கிரவாண்டி அருகே ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப்பாளையம் ஏரியில் நேற்று காலை ஆண் சடலம் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.இறந்தவர், 25 வயது மதிக்க தக்க நபராக உள்ளார். நீல கலர் கட்டம் போட்ட டிராயரும், பனியன் துணியில் தலையை மூடி போடக் கூடிய பிங்க் கலர் முழுக்கை சட்டையும், மஞ்சள் கலரில் பனியனும் அணிந்திருந்தார்.இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.