உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குளத்தில் விழுந்து சிறுவன் பலி

 குளத்தில் விழுந்து சிறுவன் பலி

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே குளத்தில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி, சாமந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் கார்த்திகேயன், 13; கப்ளாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் 1:30, மணிக்கு அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்தார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். அவரது தாய் அலமேலு, 46; அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ