உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருவரைத் தாக்கிய சகோதரர்கள் கைது

ஒருவரைத் தாக்கிய சகோதரர்கள் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில், காரில் சென்ற சென்னை நபரை வழிமறித்து தாக்கிய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 43; இவர், நேற்று முன்தினம் தனது மாருதி ஸ்விப்ட் காரில் திருச்சி நோக்கிச் சென்றார். விழுப்புரம், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த வழுதரெட்டி சீனிவாசன் மகன்கள் முகுந்தன், 24; அருள்செல்வன், 27; ஆகியோர் காரை வழிமறித்து, வழிவிட மாட்டாயா எனக் கேட்டு பாலாஜியை தாக்கி கார் முன், பின் கண்ணாடியை உடைத்தனர்.புகாரின் பேரில், முகுந்தன், அருள்செல்வன் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்