உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / களிமண் சுவாமி சிலை சேதம் மர்ம நபர்களுக்கு வலை

களிமண் சுவாமி சிலை சேதம் மர்ம நபர்களுக்கு வலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கோவிலில் களிமண் சுவாமி சிலையை உடைத்து சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை மலட்டாற்றில் திறந்த வெளியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று காலை 6:00 மணியளவில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது கோவிலில் இருந்த களிமண்ணால் ஆன அங்காளம்மன் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி அருகில் உள்ள குட்டையில் வீசியுள்ளனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், களிமண் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை