உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

விழுப்புரம் : மகளை காணவில்லை என்று தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விழுப்புரம் அடுத்த எல்.ஆர்.பாளையம் கிராமத்தை சேர்ந்த காயத்ரி, 18; விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.மாணவியின் தாய், கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ