உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் வலியுறுத்தல்

விழுப்புரம்: 'இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்' என இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தினார். விழுப்புரத்தில் வி.சி., கட்சி சார்பில் நடந்த பஞ்சமி நிலம் மீட்பு கருத்தரங்கில், பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அளிக்க வேண்டும். அந்த கோரிக்கைக்கு கம்யூ., துணை நிற்கும். தமிழகத்திலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (எஸ்.ஐ.ஆர்) திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். ஏற்கனவே, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கினர். குஜராத்திலும் நீக்கியுள்ளனர். தமிழகத்திலும் அதே நோக்கத்தில் தான் நடக்கும் என்பதால், உறுதியாக எதிர்க்கிறோம். வாக்காளர்களை கண்டறிவது, பிறகு நீக்குவது, நீக்கியவர்களை அகதிகளாக மாற்றுவதுதான் அவர்களது திட்டம். தி.மு.க., கூட்டணி வெற்றியை தடுப்பதே இதன் நோக்கம். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளை தடுக்க குறி வைக்கின்றனர். தமிழக உரிமைக்காக, தி.மு.க., எடுக்கும் முயற்சிக்கும், போராட்டங்களுக்கும் இந்திய கம்யூ., உறுதுணையாக இருக்கும். தி.மு.க., கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. அ.தி.மு.க., மெல்ல, மெல்ல நிறம் மாறுகிறது. அ.தி.மு.க., ஒரு ஜனநாயக வடிவம். அதனை சகோதரர் பழனிசாமி சிதைக்கக்கூடாது. தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை