உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தாமதம் என புகார் மனு

வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தாமதம் என புகார் மனு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தாமதப்படுத்தி வருவதாக, மின்துறை துணை தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.விழுப்புரம் நிலவணிகர்கள் சங்கம் மற்றும் பில்டர் அசோசியேஷன் சார்பில், அதன் தலைவர் முரளி, செயலர் முருகானந்தம்உள்ளிட்டோர், விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த, மின்வாரிய துணை சேர்மன் மணிவண்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்தில் பல இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கு, கடந்த 6 மாதங்களாக நிரந்தர மின் இணைப்பு வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இது குறித்து, நகராட்சி மற்றும் மின்துறையில், வணிகர் தரப்பில் பல முறை புகார் அளித்தும் மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.விழுப்புரம் நகர பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் இதுபோல் வணிக கட்டடங்களை கட்டி, அதற்கு நிரந்தர மின் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சியிடம் இருந்து, கட்டட முடிவு சான்றிதழ் கேட்டு மின்துறையினர் அலைகழித்து வருகின்றனர். கடந்த 2019ல் அறிவித்த சட்டத்தை தற்போது நடைமுறை படுத்துவதாக கூறி, விழுப்புரம் நகரில் மட்டும் தான் மின்துறை இவ்வாறு நடந்துகொள்கிறது. திண்டிவனம், கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் மின் இணைப்புகள் உடனே வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை