| ADDED : நவ 22, 2025 04:45 AM
விழுப்புரம்: தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவரை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வி ழுப்புரம் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்த தே.மு.தி.க., தொழிற் சங்க மண்டல தலைவர் முருகதாஸ். இவர், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு: கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக உள்ளேன். கடந்த 13ம் தேதி காலை மணம்பூண்டி சந்திப்பில், டீ கடையில் நின்றிருந்தேன். அங்கு வந்த, திருக்கோவிலுார் போக்குவரத்துக்கழக பணிமனையில் பணி புரியும் பெயர் தெரிந்த டிரை வர்கள், கண்டக்டர், தொழில்நுட்ப ஊழியர் ஆகியோர் என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். இனிமேல், எங்களை பற்றி சமூக வலை தளத்தில் பதிவு போட்டால், கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டினர். அங்கிருந்தவர்கள் என்னை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, நான் அரகண்டநல்லுார் போலீசில் புகாரளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி விசாரணைக்கு அழைத்த போலீசார், என்னை மிரட்டியதோடு, ரகுநாதன் தரப்புக்கு ஆதரவாக பேசி அனுப்பிவிட்டனர். இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள் ராஜசந்திரசேகர், மனோ, ரமேஷ், சிவா, வேல்முருகன் உடனிருந்தனர்.