மண்டல வாலிபால் போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.இதில் சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி பாராட்டினார்.கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ், துணை முதல்வர் மோகன், துறைத் தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சீனிவாசன், அருண்குமார், ராம்குமார், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.