| ADDED : ஆக 22, 2011 12:27 AM
விழுப்புரம் : விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் மணிமேகலை தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,வெங்கடாஜலம், மண்டல இணை பதிவாளர் பாலகிருஷ்ணன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நவ்ஷாத், சர்க்கரை ஆலை தனி அலுவலர் சிவமலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். உளுந்தூர்பேட்டையில் இருந்து சேந்தநாடு வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். தார் பாய் விலை அதிகமாக உள்ளதால் பிளாஸ்டிக் ஷீட் விற்க வேண்டும். விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாலை பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள் ளது. கரும்பு விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் குறைகளை கேட்க வேண்டும். ஏரி வாய்க்கால்கள் சீரமைக்கப்பட வேண்டும். கோலியனூர் வாய்க்கால் சீரமைக்க வேண்டும். உணவு உற்பத்தி குழு வில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தியாகதுருகம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும். ரெட்டணை - மண்டகபட்டு இடையே தொண்டியாற்றில் பாலம் கட்ட நிதி ஒதுக்கியும் பணி நடக்க வில்லை. மணலூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் சிமென்ட் தரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் வலியுறுத்தினர்.