உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் உள் ளாட்சி மன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் படிவத்தில் சுருக்க திருத்த பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி. ஓ., உமாபதி தலைமை தாங்கினார். தாசில்தார் வைகுண்டவரதன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு ஓட்டுப்பதிவு மைய நிலை முகவர்களை நியமிப்பது குறித்து விளக்கப்பட்டது.இதில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, ஜெயசங்கர், சுப்ரமணியன், காங்., மாவட்ட கவுன்சிலர் இளையராஜா, பா.ம.க., ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை