உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு

கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு

விழுப்புரம் : கோலியனூர் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்தனர்.கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ்பாபு. இவரது மனைவி விஜயா நேற்று 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது யாசீனிடம் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., மணி ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதேபோல் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் மனைவி சாந்தி நேற்று மனு தாக்கல் செய்தார். கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., விவசாய அணி செயலாளர் கேசவன் மனு தாக்கல் செய்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் புகழேந்தி, முன்னாள் துணை சேர்மன் முருகவேல் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்