உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு

பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கிற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 48; இவர், நேற்று முன்தினம் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி மார்க்கமாக பைக்கில் சென்றார். நேருஜி சாலையில், பின்னால் பைக்கில் வந்த வி.மருதுாரைச் சேர்ந்த சக்கரை மகன் தமிழ்ச்செல்வன், 34; என்பவர் ராஜேந்திரனிடம் வழிவிடுமாறு கூறியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில், தமிழ்செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை