முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
விழுப்புரம் : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த ஆலத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. இம்முகாமை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில், கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 102 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து வருகின்றனர். மனுக்களை முதல்வரின் முகவரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.முகாமில் குநீர் வசதி, கழிவறை வசதி, வாகன நிறுத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறியப்பட்டது,' என்றார்.அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மஞ்சுளா, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ., கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.