உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

வானுார்: கரசானுார் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன. வானுார் தொகுதிக்குட்பட்ட கரசானுார் கிராம தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அ.தி.மு.க., கிளை நிர்வாகிகளுக்கு, ஒன்றிய துணை செயலாளர் கணேசன் ஏற்பாட்டின் படி, கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் கணேசன், நிர்வாகிகளுக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் கறிக்கோழி வழங்கி வாழ்த்தினார். இதில், நிர்வாகிகள் குமார், கண்ணன், ஜெய்சங்கர், குணா, செல்வம், சகுந்தலா, கஜேந்திரன், தொள்ளமூர் கிளை செயலாளர் ஏழுமலை மற்றும் அதிமுக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை