தி.மு.க., மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மகளிரணி மாவட்ட அமைப்பாளர் அமுதா வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, பொருளாளர் ஜனகராஜ், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.மகளிரணி மாநில இணைச் செயலாளர் தமிழரசி, திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் ரியா, மகளிர் அணி பிரசாரகுழு உறுப்பினர் தேன்மொழி ஆலோசனை வழங்கினார். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றியாற்றினார்.கூட்டத்தில் தி.மு.க., மகளிரணி அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். மகளிரணி அமைப்பாளர் அருள்மொழி நன்றி கூறினார்.