உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்

 நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்

மயிலம்: மயிலம் அடுத்த சித்தணியில் மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு, மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜமுனாராணி முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர் கட்சிக்கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மயிலம் மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பரசுராமன், பொருளாளர் பழனி, ஒன்றிய துணைச் செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் ராஜா, நாகராஜன், ஏழுமலை, தட்சணாமூர்த்தி, ஆண்டி பிச்சை, வீராசாமி, தங்கமணி, திருமலை, கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி