போதை நபர் தற்கொலை
விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50; குடிபழக்கம் உடைய இவரை, அவரது மனைவி தனலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர், வீட்டில் துாக்கு போட்டு கொண்டார். உடன், அவரை மீ்டடு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.