உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்

 தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்

விழுப்புரம்: இறந்த மகளின் போட்டோவில் இருந்த தாலிச் செயின் திருடு போனதாக போலீசில், மூதாட்டி புகார் கொடுத்துள்ளார். விழுப்புரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பழனியம்மாள், 60; இவர், தனது வீட்டில் இறந்த மகளின் போட்டோவில் மூன்றரை சவரன் தாலிச் செயினை மாட்டிருந்தார். அந்த செயினை கடந்த மாதம் 11ம் தேதி காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !