உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்

மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின் திருட்டு புகாரில் மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி வீரம்மாள். இவர், திண்டிவனம் மின்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.இவரது வீட்டில், மின்சாரம் திருடப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மின்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி மின் திருட்டு நடந்ததை உறுதி செய்தனர்.இதுகுறித்து, பிரம்மதேசம் மின்துறை உதவி பொறியாளர் ராஜராஜன் கடந்த 8.8.23ம் தேதி பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் மின்திருட்டு சம்பவம் தொடர்பாக, வீரம்மாளை சஸ்பெண்ட் செய்து, திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் கடந்த 16ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி