உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேலைவாய்ப்பு முகாம் 36 பேருக்கு நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாம் 36 பேருக்கு நியமன ஆணை

விழுப்புரம்- விழுப்புரத்தில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 36 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் பயன்பெறும் வகை யில் நடந்த முகாமில், 20க் கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்தனர்.முகாமில், 202 பேர் பங்கேற்றனர். இறுதியாக தகுதியுள்ள 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணையை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பாலமுருகன் வழங்கினார்.இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், இளம் தொழிலாளர் அலுவலர் நாகலட்சுமி மற்றும் அலுவலர்கள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி