உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் நாகராஜன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் பொன்னுசாமி, மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கணேசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் குமார், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மண்டல செயலாளர் ஏழுமலை ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்குதல், உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தோமினிக்சாவியோ நிறைவுரை ஆற்றினார். அரசு அலுவல உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி