உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்

 கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்

விழுப்புரம்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2024-25ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தில் கூட்டுறவு கல்வி நிதி மற்றும் கூட்டுறவு வளர்ச்சி, ஆராய்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் விக்ரமிடம், நிதிக்கான காசோலையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வழங்கினார். அப்போது, வங்கி பொது மேலாளர் விநாயகமூர்த்தி, முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்பிரபு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்