உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்ஜினியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

விழுப்புரம்: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி, இன்ஜினியரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.மயிலத்தை சேர்ந்தவர் தமிழரசன்,28; இன்ஜினியர். இவர், கடந்த 12ம் தேதி, வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.இதை நம்பிய தமிழரசன், தனது போன் பே ஆப் மூலம், மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.1.96 லட்சத்தை 6 தவணைகளாக அனுப்பினார். பின்னர் டாஸ்க் முடித்ததும், மர்ம நபரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை